சீனா பெய்ஜிங்கில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா – போர்க்கால ஊரடங்கு அமல்..!

0
beijing corona
beijing corona

சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தலைநகர் பீஜிங்கில் உள்ள மார்க்கெட் பகுதியில் 2 பேர் உள்பட அந்த நாட்டில் புதிதாக 10 பேருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் தலை சிறந்த கல்லூரிகள் பட்டியல் – அதிக இடத்தை பெற்ற தமிழகம்..!

மீண்டும் 2 பேருக்கு கொரோனா

beijing corona
beijing corona

சீனாவில் 2019 ஆம் பரவ ஆரம்பித்த கொரோனா உலகம் முழுவதும் பரவியது அதை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் தத்தளித்து.ஒயின் காட்டுக்குள் கொண்டு வந்த சின்னவில் இப்பொழுது மீண்டும் கொரோன பரவல் ஆரம்பித்திருக்கிறது.56 நாட்கள் கழித்துக் கடந்த வியாழக்கிழமை அன்று பெய்ஜிங்கில் கொரோனா தொற்று மீண்டும் பதிவானது.கடந்த ஜுன் 9 ஆம் தேதி பெய்ஜிங்கில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியும் வீடு திரும்பிய பின்னர், அங்கு இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.பீஜிங்கில் புதிதாக நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டில் சீன இறைச்சி உணவு ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள் ஆவார்கள். 2 நாளில் 3 பேருக்கு பீஜிங்கில் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது, ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

சீனா பெய்ஜிங்கில் ஊரடங்கு

curfew
curfew

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளை மீண்டும் திறக்க எடுக்கப்பட்ட முடிவை அந்நகர அதிகாரிகள் கைவிட்டுள்ளதாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.இதனால் உணவு சந்தையில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என  அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்கள் ஜிங்ஷென் கடல் உணவு சந்தையையும் மூடி, பீஜிங்கின் மொத்த உணவு சந்தைகள் அனைத்திற்கும் உணவு மற்றும் சுற்றுச்சூழல் மாதிரிகளை சோதிக்க உத்தரவிட்டனர்.ஆறு புதிய உள்நாட்டு கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகிய பின்னர் பீஜிங்கில் சிலபகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.சீனா  கொரோனா உள்ளூர் பரவலுக்கான முதல் பாதிப்பை தற்போது அறிவித்து உள்ளது.- 52 வயதான ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக சீன தலைநகரை விட்டு வெளியேறவில்லை என்றும்,நகரத்திற்கு வெளியில் இருந்து யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறி உள்ளார்.சீன தலைநகரில் உள்நாட்டில் பரவிய மேலும் ஆறு கொரோனா பாதிப்புகளை தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து பீஜிங்கில் உள்ள அதிகாரிகள் நகரத்தில் உள்ள பெரிய மொத்த சந்தையை தற்காலிகமாக மூடினர்.கொரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், மீண்டும் கொரோனா அலையை சீனா சந்திக்க நேரிடுமோ என்ற கவலை எழுந்துள்ளதுசர்வதேச விமானங்கள் பெய்ஜிங்கில் தரையிறங்காமல் இருக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அந்த விமானங்கள் அனைத்தும் மற்ற நகரங்களுக்குத் திசை திருப்பப்படும்.தற்போது கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பெய்ஜிங்கிற்கு வெளியே பயணம் மேற்கொண்டது தெரிய வந்துள்ளது.இந்நிலையில், இவருடன் தொடர்பில் இருந்து இருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது.

போர்கால எமர்ஜென்சி

corona
corona

வெள்ளிக்கிழமை நிலவரப்படி சீனாவில் 83,064 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 65 பேர் மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாருக்கும் இதுவரை தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை.78,365 பேர் அங்கு கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர். அந்நாட்டுச் சுகாதாரத்துறையின் தரவுகளின் படி 4,634 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.பெய்ஜிங் உள்ளே கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. போர்கால எமர்ஜென்சி அறிவுப்புகள் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்கு மக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெய்ஜிங் என்பது சீனாவின் தலைநகரம் ஆகும் . இங்கிருந்து கொரோனா வைரஸ் பரவுவது என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயம் ஆகும். இது சீனாவில் இரண்டாம் அலை கொரோனா தாக்குதலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here