பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி..!

0
Afridi
Afridi

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை பல திரைத்துறை நட்சத்திரங்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா தாக்கம்:

கொரோனா வைரஸ் தற்போது பாகிஸ்தானிலும் தீவிரமாக பரவி வருகிறது. இருப்பினும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அந்நாட்டில் முழு ஊரடங்கை அமல்படுத்த முடியவில்லை என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்து உள்ளார். அங்கு இதுவரை 1,32,405 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டும் 2,551 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 88 பேர் உயிரிழந்து உள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

கொரோனாவுக்கு ‘முத்த வைத்தியம்’ செய்த சாமியார் கொரோனா தாக்கி பலி..!

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடி கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். அதில் வியாழக்கிழமை தனக்கு உடல்நிலை சரியில்லை, இதனால் எனது உடல் மோசமாக வலித்தது. கொரோனா பரிசோதனை செய்தலில் துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நான் விரைவில் மீண்டு வர பிராத்தனை தேவை, இன்ஷா அல்லாஹ் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here