கொரோனா தடுப்பூசி சான்றிதழில் முதல்வர் படம்  – மாநில அரசு முடிவு!!!

0

சத்தீஸ்கர் அரசு 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கான கோவிட் -19 தடுப்பூசி போர்ட்டலை சமிபத்தில் அறிமுகப்படுத்தியது. இப்போது அம்மாநிலம் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு முதலமைச்சர் பூபேஷ் பாகேலின்  புகைப்படம் அச்சடிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கி வருகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மே 12 அன்று, சத்தீஸ்கர் அரசு 18-44 வயதுக்குட்பட்டவர்கள் முறையாக தடுப்பூசி போடுவதற்காக ‘CG டீகா’ என்ற வலைதளத்தை  அறிமுகப்படுத்தியது. ஸ்மார்ட்போன்கள் அல்லது இணைய வசதி இல்லாதவர்கள் பஞ்சாயத்துகள், நகர்ப்புறங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் கோவிட் -19 தடுப்பூசி பெறுவதற்காக இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யலாம்.

 

அதே சமயம் தடுப்பூசி சான்றிதழில் முதல்வர் புகைப்படம் அச்சிடப்படுவதற்கு கடும் கண்டனங்களும் எழுந்துள்ளன. மேலும் இதுபற்றி சத்தீஸ்கர் சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங்தியோ கூறும்போது 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மாநில அரசு நிதியுதவி அளித்து வருவதால் முதல்வர் புகைப்படத்தை யாரும் எதிர்க்க தேவையில்லை என்று கூறியள்ளார்.

இதற்கு முன்னர் பிரதமர் மோடியின் படம் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் அச்சடிக்கப்பட்டதால் பல்வேறு புகார்கள் எழுந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையம், இது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது என்று மத்திய சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியது. பின்னர் அப்போது தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களில் மட்டும் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து மோடியின் படம் நீக்கப்பட்டது. தற்போது சத்தீஸ்கர் மாநில அரசின் இந்த நடவடிக்கையால் அம்மாநில அரசுக்கு எதிராகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here