21வது சர்வதேச திரைப்பட விழா எப்போது?  திரையிடப்பட போகும் தமிழ் படங்கள் என்னென்ன?  முழு லிஸ்ட் இதோ!!

0
21வது சர்வதேச திரைப்பட விழா
சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு 21  சென்னை சர்வதேச விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 14ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த  விழாவில் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கிறது. அதில் சில தமிழ் படங்களும் திரையிட பட இருக்கிறது. அதற்கான முழு பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
அதாவது வெற்றிமாறன் இயக்கிய விடுதலை பகுதி 1, வசந்தபாலன் இயக்கிய அநீதி, மந்திரமூர்த்தி இயக்கிய அயோத்தி, தங்கர் பச்சான் இயக்கிய கருமேகங்கள் கலைகின்றன,  பிரபு சாலமன் இயக்கிய  செம்பி, மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் இருவரும் சேர்ந்து இயக்கிய போர் தொழில், விக்ரம் சுகுமாரன் இயக்கிய ராவண கோட்டம்,  சந்தோஷ் நம்பிராஜன் இயக்கிய ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன், கார்த்திக் சீனிவாசன் இயக்கிய உடன் பால் மற்றும் அனில் இயக்கிய சாயவனம் உள்ளிட்ட படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here