அரியர் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்.,21 ஆண்டுக்குப் பின் கிடைத்த வாய்ப்பு! தவறாம யூஸ் பண்ணிக்கோங்க!!

0
அரியர் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்.,21 ஆண்டுக்குப் பின் கிடைத்த வாய்ப்பு! தவறாம யூஸ் பண்ணிக்கோங்க!!
அரியர் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்.,21 ஆண்டுக்குப் பின் கிடைத்த வாய்ப்பு! தவறாம யூஸ் பண்ணிக்கோங்க!!

பொறியியல் பட்டப்படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு, 21 ஆண்டுகளுக்குப் பின் அரிய வாய்ப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

அரிய வாய்ப்பு :

கடந்த கொரோனா தொற்றின் போது, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கான அனைத்து வகுப்புகளும், தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதனால் அரியர் வைத்திருந்த பல மாணவர்கள், இதை தங்களுக்கு கிடைத்த வரப் பிரசாதமாக நினைத்து, அனைத்து பேப்பர்களையும் ஒரே அட்டம்டில் கிளியர் செய்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது நிலைமை சீராகியுள்ளதால், மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் மீண்டும் நேரடியாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, அண்ணா பல்கலைக்கழகம், அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கான சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோலிவுட்டில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி.., அதுவும் ஹீரோவாகவா?? ஏகபோக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இதன்படி 2001 -02 ம் கல்வி ஆண்டின் 3வது செமஸ்டரிலும், 2002-03 கல்வியாண்டின் முதல் செமஸ்டரிலும் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு இதற்கான சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நடப்பாண்டு நடைபெறும் செமஸ்டரில், நிர்ணயிக்கப்பட்ட தேர்வு கட்டணத்துடன் ரூபாய் 5,000 கூடுதலாக செலுத்தி, அரியர் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 3ஆம் தேதிக்குள், இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here