கோலிவுட்டில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி.., அதுவும் ஹீரோவாகவா?? ஏகபோக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
கோலிவுட்டில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி.., அதுவும் ஹீரோவாகவா?? ஏகபோக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
கோலிவுட்டில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி.., அதுவும் ஹீரோவாகவா?? ஏகபோக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் காமெடி நட்சத்திரமான கவுண்டமணி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவுண்டமணி

தமிழ் சினிமாவில் சமுத்திரம், சமஸ்தானம், சொக்க தங்கம் போன்ற படங்களில் சிறந்த காமெடி நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் கவுண்டமணி. மேலும் இவர் செந்திலுடன் சேர்ந்து நடித்த அனைத்து காட்சிகளும் இன்று வரை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எத்தனை காமெடி நட்சத்திரங்கள் சினிமாவுக்குள் வந்தாலும் கவுண்டமணி என்று சொன்னாலே தனி மவுசு இருக்க தான் செய்கிறது. இந்நிலையில் இவர் கடைசியாக 49ஓ’, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ போன்ற படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

சீரியலில் வில்லியாக ரீ என்ட்ரி கொடுக்கும் முக்கிய நபர்.., அப்போ ட்விட்டுகளுக்கு பஞ்சமே இருக்காது!!

இந்நிலையில் அவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் மதுரை செல்வம் தயாரிக்கும் இந்த படத்தில் கவுண்டமணி நாயகனாக நடிக்க உள்ளதாகவும் கூறிவருகின்றனர். இதை அறிந்த ரசிகர்கள் மீண்டும் கவுண்டமணியின் நடிப்பை பார்க்க ஆவலுடன் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here