ஒன்னு இல்ல., ரெண்டு இல்ல., மொத்தம் 5 இருக்காம் – சந்திரமுகி 2-வின் அனல்பறக்கும் அப்டேட்!!

0
சந்திரமுகி 2-வின் அனல்பறக்கும் அப்டேட்

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி. வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் மொத்தம் 5 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

லேட்டஸ்ட் அப்டேட்:

தமிழ் திரையுலகில் நடன மாஸ்டர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவரது திகில் படங்களான முனி மற்றும் காஞ்சனா 2 ஆகியவை  பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால், கொஞ்ச நாட்களாக பேய் படங்களை தவிர்த்து ஆக்சன் படங்களில் ஆர்வம் காட்டி வந்த இவர், மீண்டும் தன் கவனத்தை திசை திருப்பி உள்ளார்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி, பிரம்மாண்ட வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் 2ம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில், நாயகியாக நடிக்க லட்சுமி மேனன் கமிட்டாகி இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போதைய தகவலின்படி இவரோடு சேர்த்து, மகிமா நம்பியார், மஞ்சிமா மோகன், சிருஷ்டி டாங்கே, சுபிஷா கிருஷ்ணன் உள்ளிட்ட 5 நாயகிகள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதை பார்த்த பலரும், என்னது 5 ஹீரோயின்ஸ் கூட ராகவா லாரன்ஸ் ரொமான்ஸ் பண்ண போறாரா? என கிண்டல் அடித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here