புதிய கொள்கை வாபஸ் பெற ‘வாட்ஸ் அப்’க்கு – அரசு அதிரடி அறிவிப்பு!!!

0

புதிய தனியுரிமை கொள்கையை வாபஸ் பெற வேண்டும் என்று வாட்ஸ் அப்பிற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

வாட்ஸ்அப்புக்கு 7 நாள் கெடு:

உலகம் முழுவதும் மக்கள் அனைவரும் தகவல்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பகிர்வதற்கு   ‘வாட்ஸ் அப்’ செயலியை உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனமானது பயனாளர்களின் தகவல்களை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு தனி நபர் கொள்கையை அறிமுகப்படுத்தியது.

இதற்கிடையில், எலெக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தனது புதிய பாலிசியை வாபஸ் பெற வாட்ஸ்அப்பிற்கு உத்தரவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இது குறித்து அமைச்சகம்  வாட்ஸ் அப்பிற்கு மே 18 அன்று ஒரு கடிதம் அனுப்பியது அதில் 7நாட்களுக்குக்குள் புதிய தனியுரிமை கொள்கையை வாபஸ் பெற தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் இந்தியாவில் 40கோடிக்கும் அதிகமாக மக்கள் ‘வாட்ஸ் அப்’ செயலியை பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அறிவித்தனர்.

இந்தியர்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நிறைவேற்ற சட்டப்படி எல்லா வாய்ப்புகளையும் அரசு பரிசீலிக்கும். அதுமட்டுமல்லாமல் மே 25க்குள் வாட்ஸ் அப் பதில் அளிக்க வேண்டும் அப்படி பதிலளிக்காமலோ அல்லது ‘வாட்ஸ் அப்’ பின் முடிவு அரசுக்கு சாதகமாக வரவில்லை என்றாலோ சட்டத்துக்கு உட்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here