விடுமுறையை கொண்டாடும் மாணவர்களே.., ஸ்கூல் ரீ-ஓபனில் இருக்கும் மிகப்பெரிய ஷாக்!!

0
விடுமுறையை கொண்டாடும் மாணவர்களே.., ஸ்கூல் ரீ-ஓபனில் இருக்கும் மிகப்பெரிய ஷாக்!!
விடுமுறையை கொண்டாடும் மாணவர்களே.., ஸ்கூல் ரீ-ஓபனில் இருக்கும் மிகப்பெரிய ஷாக்!!

தமிழகத்தில் தற்போது, 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் நடந்து வரும் நிலையில், அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தை அரசானது தீவிரமாக செயல்படுத்தியும் வருகிறது. அதாவது, வருடந்தோரும் 6 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறன் மற்றும் புலன் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுத்து, அவர்களையும் அருகில் உள்ள பள்ளிகளில் வயதிற்கு ஏற்ற வகுப்பில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த வகையில், நடப்பு வருடம் கடந்த ஏப்ரல் 2வது மற்றும் மே இறுதி வாரங்களில், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான கணக்கெடுப்பை மாவட்டம் தோறும் தொடங்க வேண்டும் என தொடக்க கல்வி இயக்குநர் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் சுற்றறிக்கையை முன்பே அனுப்பி வைத்தார். இதன்படி, கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களை எதிர்வரும் கல்வியாண்டில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள் சேர்க்கை குறித்து மாநில திட்ட இயக்குநர் சில அறிவுரைகளை பள்ளிகளுக்கு வழங்கி உள்ளார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்.., ஜூலை 1ம் தேதி முதல் இலவச அரிசி, கோதுமை கிடையாது??

அதாவது, பள்ளியில் சேரும் மாணவர்களிடம் ஆதார் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் இல்லாத காரணத்தால் சேர்க்கையை மறுக்க கூடாது என்று கூறியுள்ளார். மேலும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும், தங்களது பள்ளியில் பயிலும் மாணவர்களின் ரேஷன் அட்டையை பெற்று வைத்தல் வேண்டும் எனவும், தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து ஆலோசனைகளை அளித்து மீண்டும் பள்ளிக்கு வர வைத்தல் வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, எந்த ஒரு காரணத்துக்காகவும் மாணவர்களின் சேர்க்கையை மறுக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here