‘2022-23 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது’ – கமல்ஹாசன் விமர்சனம்!!

0

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் ஏமாற்றம் ;

2022-23 ம் நிதி ஆண்டுக்கான மத்திய டிஜிட்டல் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நான்காவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வேலை வாய்ப்பை உருவாக்குதல் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் அவர் வெளியிட்டார். இந்தியா அடுத்த 20 ஆண்டுகளுக்குள், எவ்வளவு முன்னேற்றத்தை அடையும் என்பதை கணித்து, இப்போது இந்த பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் உரையில் தெரிவித்தார். இந்த நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன், மக்களுக்கும் தனக்கும் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு எந்த திட்டங்கள் இல்லை எனவும், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்றும் வேதனை தெரிவித்தார். முழுக்க முழுக்க சொல்லப் போனால், பொருளாதார மேம்படுவதற்கான எந்த வழிகளும் இந்த பட்ஜெட்டில் இல்லை என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here