12 வயதில் கோடிஸ்வரன் ஆன சிறுவன் – சொந்த முயற்சியே காரணம்!!!

0

நாம் அனைவரும் 12 வயதில் என்ன செய்து இருப்போம், டிவி பார்த்து இருப்போம் அல்லது விளையாடி கொண்டு இருந்திருப்போம். ஆனால், பெஞ்சமின் அஹ்மத் என்ற லண்டனை சேர்ந்த சிறுவன் ஒருவன் கோடை கால விடுமுறையில் 2,90,000 டாலர்களை சம்பாரித்துள்ளார். அதுவும் பிக்சல் ஆர்ட் என்று கூறப்படும் ஒரு வகையான கலை திறமையினை கொண்டு இவ்வளவு பணத்தினை சம்பாரித்துள்ளார். இந்த ஓவிய தன்மையினை பயன்படுத்தி அவர் திமிங்கலம் போன்றவையின் புகைப்படங்களை வரைந்துள்ளாராம். இந்த ஓவிய திறமையினை NFD ஆர்ட் என்றும் கூறுகின்றனர். இதனை பயன்படுத்தி எந்த அளவிற்கு அரிய வகை புகைப்படங்களை வரைகிறார்களோ அந்த அளவிருக்கு மதிப்பு கூடும் என்றும் கூறுகின்றனர். கூடுதலாக காபிரைட்ஸ் பிரச்னையும் இந்த ஆர்ட் முறையால் கிடையாதாம். பெஞ்சமின் இந்த வயதிலேயே தனக்கு என்று ஒரு யூடியூப் சேனல் வைத்து அதன் மூலமாகவும் பணம் ஈட்டி வருகிறாராம். அந்த யூடியூப் சேனலில் தான் நீச்சல் அடிப்பது, பேட்மிட்டன் விளையாடுவது போன்ற தனது பொழுதுபோக்கு விஷயங்களை பதிவிடுவாராம். அவர் அனைவருக்கும் அறிவுரையும் வழங்குகிறார். அது என்னவென்றால், எதையும் விரும்பி செய்தால் தான் வெற்றி கிடைக்கும் என்றும், கடினப்பட்டு எந்த விஷயத்தினையும் செய்ய கூடாது என்றும் கூறி உள்ளார். நீங்கள் சமைக்க வேண்டும் எந்தமரு நினைத்தாள் சமைக்கலாம், டான்ஸ் ஆட வேண்டும் என்று நினைத்தாள் டான்ஸ் ஆடலாம். எது உங்களது வலிமை என்று நினைக்கிறீர்களோ அதனையே செய்யுங்கள் என்று கூறுகிறார். பெஞ்சாமனின் தந்தை இம்ரான் அவர் ஒரு சாப்ட்வார் பொறியாளராம். இவரே தனது மகனுக்கு 5 வயது முதல் இது போன்ற அரிய வகை ஓவிய திறமையினை கற்று கொடுத்துள்ளாராம். அவரது தந்தை தற்போது அவரை நினைத்து மிகவும் பெருமைபடுகிறாராம். பெஞ்சமின் முதல் முதலாக மைன் கிராப்ட் காலெக்ஷன் என்று ஒன்றினை தான் இந்த ஆர்ட் மூலமாக செய்துள்ளார். தற்போது திமிங்கலங்களை வைத்து ஆர்ட் ஒர்க் செய்துள்ளார். திமிங்கல தொகுப்பினை பயன்படுத்தி ஒரு கேம் உருவாக்க வேண்டும் என்பது தான் பெஞ்சாமனின் விருப்பமாம். தனது வடிவமைப்புகளை எப்படி விற்பது என்பது போன்ற ஆலோசனையில் பெஞ்சமின் இறங்கி உள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here