வலிமைக்கு பின் மற்றொரு மாஸ் படத்தை களமிறக்க உள்ள போனி கபூர் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0

போனி கபூர் தயாரிப்பில் தற்போது அஜித் நடிப்பில் வலிமை மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான நெஞ்சுக்கு நீதி ஆகிய திரைப்படங்கள் உருவாகியுள்ளது. வலிமை திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்களில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தையும் வெளியிட போனி திட்டமிட்டுள்ளாராம்.

போனியின் திட்டம்:

போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி அன்று திரையரங்கங்களில் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக இந்த திரைப்படத்தின் தேதி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா பரவல் சற்று குறைந்து வருவதால் வலிமை திரைப்படத்தை வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று திரையரங்கங்களில் வெளியிட படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

போனி கபூர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான நெஞ்சுக்கு நீதி என்னும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். ஹிந்தியில் 2019 ஆம் ஆண்டில் வெளியான ”ஆர்டிக்கிள் 15” என்ற படத்தின் ரீமேக் படமாகவே இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. வலிமை திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்களில் இந்த திரைப்படத்தையும் வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். போனி தயாரிப்பில் வெளியாக இருக்கும் இந்த இரண்டு திரைப்படத்திற்குமே ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here