மாநில அரசின் அலட்சியத்தால் தொடரும் உயிர் பலி – நடவடிக்கை எடுக்கப்படுமா??

0

10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியில் அமர்ந்துள்ள கட்சிக்கு மக்களிடையே கெட்டபெயர் வந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பதன் விளைவாக முழு ஊரடங்கு போடுவதில் தயக்கம் காட்டுகிறது. நாளுக்கு நாள் உயிர் பலி அதிகரித்து கொண்டேயுள்ளது.

அரசின் அலட்சியத்தால் தொடரும் உயிர் பலி

தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் 12 மணி வரையிலான தளர்வு மிகவும் ஆபத்தானது என கோவை மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் மக்கள் யாரும் ஒத்துழைப்பு அளிப்பது போல் தெரியவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தியாவசிய துறைகள் மற்றும் மருத்துவத்துறைகள் மட்டுமே இயங்க வேண்டும். மக்கள் யாருமே வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. கடுமையான நடவடிக்கை மட்டுமே நோய் பரவல், உயிரிழப்புகளை தடுக்கும்.

போலீசாருக்கு சுதந்திரம் வழங்கி, வாகன போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். மருத்துவ உதவி தேவையில்லாதவர்கள், வெளியே வராமல் வீட்டுக்குள் தனித்திருந்தால் மட்டுமே, மற்றவர்களுக்கு பரவாமல், கொரோனா சங்கிலி அறுபடும். அதற்கு தேவை, தி.மு.க., அரசின் துணிச்சலான நடவடிக்கை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவை அனைத்தும் நடைமுறை ஆக்கப்பட்டால் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டுவரமுடியும்,அதற்க்கு தி.மு.க.அரசின் துணிச்சலான நடவடிக்கை மிகவும் அவசியமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here