தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தாக்கம் – அதிர்ச்சியில் மக்கள்!!!

0

தற்போது இந்தியாவில் கருப்பு பூஞ்சை எனப்படும்  மியுகோர் மைகோசிஸ் நோய் ஏற்படுவது அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவிலும் கேரளாவிலும் இந்நோயால்  பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த நோய் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற..கிளிக் செய்யுங்கள்..!

இந்த நோய் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் இந்தியாவில் உயர்ந்து வருகிறது.தீவிர கொரோனா தொற்று, ஆக்சிஜன் குறைபாடு, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும் கொரோனா நோயாளிகளை இந்நோய் எளிதில் தாக்குகிறது. மேலும் இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் இதனை எளிதில் குணப்படுத்தி விடலாம் என்று கூறியுள்ளார்.

வேறு மாநிலங்களில் காணப்பட்ட இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்று தற்போது தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 சர்க்கரை நோயாளிகள் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தற்போது, சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே கொரோனாவில் இருந்து மீள போராடிக்கொண்டிருக்கும் தமிழக மக்கள் தற்போது இந்த புதிய நோய் தொற்றால் பயத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here