பில்கிஸ் பானு வழக்கு., நீதிமன்றத்தில் சரணடைய கால அவகாசம்., குற்றவாளி தரப்பில்  மனு தாக்கல்!!!

0
பில்கிஸ் பானு வழக்கு நீதிமன்றத்தில் சரணடைய கால அவகாசம்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண் உட்பட 14 பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாகினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 2008 ஆம் ஆண்டு குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இப்படி இருக்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு 14 வருடங்களுக்குப் பிறகு குஜராத் நீதிமன்றம் விடுதலை வழங்கியது.
பில்கிஸ் பானு வழக்கு நீதிமன்றத்தில் சரணடைய கால அவகாசம்.
இவ்வாறு குஜராத் நீதிமன்றம் விடுதலை வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு மேல்முறையீடு செய்திருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் குற்றவாளிகள் மீண்டும் சரண் அடைய வேண்டும் என தீர்ப்பளித்து இருந்தார். இந்நிலையில் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகுவதற்கு அவகாசம் கேட்டு மூன்று பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here