கார் விளக்கு வெளிச்சத்தில் நடந்த 12ம் வகுப்பு தேர்வு – அதிகாரிகளின் அலட்சியத்தால் கொந்தளித்த பெற்றோர்!!

0

பீகார் மாநிலத்தின், மோதி ஹாரி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற, +2 மாணவர்களுக்கான இந்தி தேர்வு, வாகன விளக்கு வெளிச்சத்தில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகள் அலட்சியம்:

பீகார் மாநிலத்தின், கிழக்கு சாம்பரானின் மோதி ஹாரி நகரிலுள்ள, மகாராஜா ஹரேந்திர கிஷோர் சிங் என்ற தனியார் கல்லூரியில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இந்தி தேர்வு நேற்று நடைபெற்றது. இதை எழுத 400 மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். அங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தினால், தேர்வு எழுத வந்த மாணவர்களும், அவர்களுடன் வந்த பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அவர்களை சமாதானம் செய்து, கல்லூரி நிர்வாகம் மாணவர்களை தேர்வு எழுத வைத்தது. எப்போதும், 1.45 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு முடிவடைய வேண்டிய தேர்வு,போராட்டம் காரணமாக  4 மணிக்கு தொடங்கியது.

இதையடுத்து 6 மணி ஆனதும் இருட்டத் தொடங்கி உள்ளது. அந்த கல்லூரியில் ஜெனரேட்டர் வசதி கூட இல்லாதது அப்போதுதான் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், தாங்கள் கொண்டு வந்த காரின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மாணவர்களை தேர்வு எழுத வைத்தனர். நாடெங்கிலும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம், குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட கல்வி நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here