பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மாரடைப்பால் இறப்பு – ரசிகர்கள் கண்ணீர்!!

0

புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களிலும், பிக்பாஸ்  நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமடைந்த சித்தார்த் சுக்லா மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது.

சித்தார்த் சுக்லா:

இந்தி திரை உலகத்தில் பிரபல நடிகரும், சிறந்த மாடலாகவும்,  இந்தி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் வெற்றியாளருமாக இருந்தவர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சித்தார்த் சுக்லா என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  இவர் நடித்த, ‘பலிகா வாது’, ‘தில் சே தில் தக்’ உள்ளிட்ட சீரியல்கள் மிகவும் பிரபலமானவை.

இதில் ‘பலிகா வாது’ என்ற சீரியல் தமிழில் ‘மண்வாசனை’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு  ராஜ் டிவியில் ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து ‘ஜலக் திக் லாஜா 6’ உள்ளிட்ட சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இதனை தாண்டி, புகழ்பெற்ற பிக்பாஸ்-13 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் மகுடம் சூட்டப்பட்டார். இதையடுத்து, அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது.

 

மேலும், 2005ஆம் ஆண்டு நடந்த போட்டியில் உலகின் சிறந்த மாடல் என்ற பட்டத்தையும் இவர் பெற்றிருப்பது குறிப்பிடத் தகுந்தது.  இந்த நிலையில் இவர் சார்ந்த அதிர்ச்சித் தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இத்தகைய புகழ் பெற்ற நடிகர் மாரடைப்பால் இன்று உயிரிழந்திருப்பதாகவும், அவருக்கு வயது 40 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூப்பர் மருத்துவமனையின் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,  அவர் நேற்று இரவு உறங்கச் செல்வதற்கு முன் சில மாத்திரைகளை உட்கொண்டதாகவும், விடிந்து வெகு நேரமாகியும் அவர் எழுந்திரிக்காததால், இரவு தூக்கத்திலேயே மாரடைப்பால் அவர் இறந்திருக்கலாம் என்றும்  தெரிவித்துள்ளது.  இந்த இளம் வயதில், நடிகரின் இந்த மறைவு அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here