ஹோட்டல் ஸ்டைல் மட்டன் நிகாரி கோஸ்ட் கறி… செஞ்சு பாருங்க.. கொஞ்சம் கூட மிஞ்சாது!!!

0

வித விதமான உணவு வகைகளை உண்ண ஆசை உங்களுக்கு இருக்கா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். அதாவது ஒரே மாதிரியாக பிரியாணி, கிரேவி, குழம்பு, பொறிப்பு என இப்படியாக செய்து அலுத்து போனவர்கள் இங்கே குறிப்பிடப்பட்டு உள்ள  ஹோட்டல் ஸ்டைல் மட்டன் நிகாரி கோஸ்ட் கறி செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தி பாராட்டை பெறுங்கள்.

தேவையான பொருட்கள்

மட்டன் – 1 கிலோ

ஏலக்காய் – 4

வெங்காயம் விழுது  – 3 தேக்கரண்டி

பட்டை – 1

கிராம்பு – 2

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

பிரியாணி இலை -1

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

மல்லி தூள் – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

வறுத்த இஞ்சி – 1 தேக்கரண்டி

வறுத்த பூண்டு – 1 தேக்கரண்டி

மோர் – 3 தேக்கரண்டி

கரம் மசாலா – 2 தேக்கரண்டி

ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி கீரை – சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயை வைத்து அதில் ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பிறகு மட்டன் சேர்த்து லைட்டாக பொரியும் அளவுக்கு வதக்கி கொள்ளவும். அதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். மேலும் மட்டன் உடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். மட்டன் வெந்து வரும் வேளையில் இஞ்சி பூண்டு விழுது, மல்லி தூள், மிளகாய் தூள், வெங்காயம் விழுது, மோர், கரம் மசாலா, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

அதன் பிறகு முக்கால் வாசி வெந்து வந்த மட்டன் கலவையை வெளியே எடுத்து வேறு ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி தம் வைத்து ஆவி வெளி வராத அளவுக்கு நன்கு மூடிவிட வேண்டும். அதன் பின்னர் வெளியே எடுத்து வறுத்த இஞ்சி,வறுத்த பூண்டு,கொத்தமல்லி போன்றவைகளை மேலே தூவி பரிமாறவும். தற்போது சுவையான மணமான மட்டன் நிகாரி  கோஸ்ட்  தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here