முதன்முறையாக எலிமினேஷனை மாற்றியமைக்கும் டாஸ்க் – அர்ச்சனாவை நேரடியாகவே தாக்கிய பாலாஜி!!

0

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 50 நாட்களை கடந்துள்ளது. இதுவரையிலும் எந்த சீசனிலும் இல்லாத விதமாக தற்போது பிக் பாஸ் எலிமினேஷனை மாற்றியமைக்கும் ஒரு சலுகையை அளித்துள்ளது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி இப்பொழுது தான் தொடங்கியது போல இருந்தது. ஆனால் 50 நாட்களை கடந்து விட்டது. நேற்றைய எபிசோடில் சுசித்ரா வெளியேறினார். வாரம் ஒருவர் வெளியேறியும் 50 வது நாள் வரை 14 போட்டியாளர்கள் உள்ளனர். ஏனெனில் 2 வாரங்களில் எலிமினேஷன் இல்லாததால் போட்டியாளர்கள் அதே எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் நேற்று வெளியேறிய சுசித்ரா போட்டியாளர்களை பற்றி புட்டுப்புட்டு வைத்தார். நிஷா, அர்ச்சனா மற்றும் ரியோ முற்றிலும் போலியான நபர்கள் என்றும் கூறி அனைவர்க்கும் ஷாக் கொடுத்தார். அந்த வீட்டில் அனிதா, சனம் மட்டும் தான் எதார்த்தமாக விளையாடுகிறார்கள் என்றும் கூறினார்.

தற்போது ப்ரோமோ ஒன்று வெளியானது. நாமினேட் செய்யப்போன ஆரியை யாரோ வம்பிழுக்க அவர்களை கண்டபடி பேசிவிட்டு ஆரி உள்ளே செல்கிறார். இந்த வாரத்தில் சோம், பாலாஜி, நிஷா, ரமேஷ், சனம், அனிதா மற்றும் ஆரி எலிமினேஷனுக்காக நாமினேட் ஆகின்றனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் எந்த சீசனிலும் இல்லாத விதமாக எலிமினேஷனை மாற்றியமைக்கும் சலுகையை அளித்துள்ளது பிக் பாஸ். அதில் அந்த பாஷை யார் பெருகிறாரோ அவருக்கு பதில் அவர்கள் வேறு யாரையாவது நாமினேட் செய்து அவர்கள் தப்பித்து கொள்ளலாம்.

இதனால் 7 பேர் இடையே கடும் போட்டி நடந்து வருகிறது. யாரும் யாருக்காகவும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. இதில் சனம் தான் ரமேஷை விட இதனை பெற தகுதியானவர் என்று கூற ரமேஷ் எழுந்து செல்கிறார்.

மேலும் ஒவ்வொருவரும் யாரை நாமினேட் செய்வீர்கள் என்று கேட்க நிஷா ஆஜித்தை கூறுகிறார். மேலும் பாலாஜி அர்ச்சனாவை கூறுகிறார். இதனை கேட்ட அர்ச்சனாவின் முகம் வில்லியை போல மாறிவிடுகிறது. இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here