முன்னாள் கணவர் மீது குற்றம் சாட்டிய  பிக்பாஸ் பிரபலம் – காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!!

0

தனது முன்னாள் கணவர் சதீஸ் மீது பிரபல கானா பாடகி இசைவாணி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

கணவர் மீது புகார்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் தற்போதைய  சீசனில் போட்டியாளராக களம் இறங்கியவர் கானா பாடகி இசைவாணி. இவர், இயக்குனர் பா.ரஞ்சித்தின் நிகழ்ச்சி மூலம் இசை உலகத்திற்கு அறிமுகம் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சியில், தீவிரமாக விளையாடிய அவர் சமீபத்தில் எலிமினேட் ஆனார். தற்போது இவர் தனது முன்னாள் கணவர் சதீஷ் குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது, விவாகரத்து ஆன பிறகு சமூகத்தில் தன்னை மனைவி என்று அவர் சொல்வதாகவும், சமூக வலைதள பக்கங்கள் உருவாக்கி மோசடியில் ஈடுபடுவதாகவும்  தெரிவித்துள்ளார். மேலும் தனது பெயரை பயன்படுத்தி பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். பிக்பாஸ் பிரபலத்தின் இந்த புகார் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here