விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவு எப்போ? என்பது குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, வெண்பாவாக நடிக்கும் பரீனா சுவாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
வெண்பா பதில்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகி, டிஆர்பியில் டாப் ரேஞ்சில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்போது எப்போது முடிவுக்கு வரும் என ரசிகர்கள் கேட்டு வரும் அளவுக்கு மோசமாக போய் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், நீங்க எடுக்கப்போகும் அந்த ஒரே டிஎன்ஏ டெஸ்டுக்காக இவ்ளோ போராட்டமா? என பகிரங்கமாக கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில், இந்த சீரியலில் வெண்பா என்ற பாத்திரத்தில் வில்லியாக நடித்து வரும் பரீனா அண்மையில் இன்ஸ்டா லைவ் நிகழ்ச்சியில் தனது ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ரசிகர் ஒருவர் தயவு செஞ்சு பாரதி கண்ணம்மா சீரியலை முடிங்க, பாக்க முடியல என கமெண்ட் செய்தார். இதற்கு பதிலளித்த, பரீனா “சரிங்க.. புரியுது. அந்த டிஎன்ஏ டெஸ்டை எடுத்துடுறோம்” என கூறி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்