டாப் கியரில் எகிறிய பாரதி கண்ணம்மா அஞ்சலி வளைகாப்பு நிகழ்ச்சி… ஒரு எபிசோடுக்கு இவ்வளவு வரவேற்பா???

0

விஜய் டிவியில் டாப் TRP ரேட்டிங்கில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் சமீபத்தில் கதையின் நாயகி கண்ணம்மாவின் தங்கையான அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சி கடந்த வாரத்தில் ஒளிபரப்பானது. இந்த எபிசோட் TRP ரேட்டிங்கில் டாப்பில் இருந்து வருகிறது.

டாப் கியரில் எகிறிய பாரதி கண்ணம்மா அஞ்சலி வளைகாப்பு நிகழ்ச்சி... ஒரு எபிசோடுக்கு இவ்வளவு வரவேற்பா???
டாப் கியரில் எகிறிய பாரதி கண்ணம்மா அஞ்சலி வளைகாப்பு நிகழ்ச்சி… ஒரு எபிசோடுக்கு இவ்வளவு வரவேற்பா???

பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த ஒரு சில வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியலில் கதையின் நாயகி கண்ணம்மா தனது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த இவர், இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். அப்பொழுது அவருக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் ஒன்றை சௌந்தர்யா எடுத்து வந்து அனாதை என்று கூறி பாரதியிடம் விட்டு வளர்க்க செய்கிறார்.

டாப் கியரில் எகிறிய பாரதி கண்ணம்மா அஞ்சலி வளைகாப்பு நிகழ்ச்சி... ஒரு எபிசோடுக்கு இவ்வளவு வரவேற்பா???
டாப் கியரில் எகிறிய பாரதி கண்ணம்மா அஞ்சலி வளைகாப்பு நிகழ்ச்சி… ஒரு எபிசோடுக்கு இவ்வளவு வரவேற்பா???

இந்நிலையில் தனக்கு பிறந்தது ஒரு பெண் குழந்தை தான் என நினைத்து கொண்டு வீட்டு வேலை செய்து அவரை வளர்த்து வருகிறார் கண்ணம்மா. இவ்வாறு இருக்க எட்டு வருட இடைவெளிக்கு பிறகு பாரதியின் குடும்பமும், கண்ணம்மாவும் சந்தித்து கொள்கின்றனர். இதையடுத்து அவர்களின் பிள்ளைகளான லட்சுமி மற்றும் ஹேமாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கின்றனர். அப்போது ஹேமாவை பார்த்த கண்ணம்மா பாரதிக்கும் வெண்பாவுக்கும் திருமணம் முடிந்து அவருக்கு பிறந்த பிள்ளை தான் ஹேமா என நினைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தான் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்பொழுது பாரதியின் உண்மையான மனைவி போன்று வெண்பா நடந்துகொண்டதை பார்த்து கடுப்பான அஞ்சலி பாரதிக்கும் வெண்பாவுக்கும் திருமணம் ஆகவில்லை என்ற உண்மையை போட்டு உடைத்தார். இந்த எபிசோட் கடந்த வாரங்களில் டிவியில் ஒளிபரப்பானது.

டாப் கியரில் எகிறிய பாரதி கண்ணம்மா அஞ்சலி வளைகாப்பு நிகழ்ச்சி... ஒரு எபிசோடுக்கு இவ்வளவு வரவேற்பா???
டாப் கியரில் எகிறிய பாரதி கண்ணம்மா அஞ்சலி வளைகாப்பு நிகழ்ச்சி… ஒரு எபிசோடுக்கு இவ்வளவு வரவேற்பா???

இதற்கான TRP ரேட்டிங் தற்போது வெளியாகி உள்ளது. அதில் இந்த காட்சிஅமைப்புகள் ஒளிபரப்பட்ட சனிக்கிழமையில் TRP ரேட்டிங் 13.1 புள்ளிகள் அதை தொடர்ந்து அது சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பட்ட திங்கள், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகள் முறையே 13.5,13.4,13.8,11.5 மற்றும் 10.6 புள்ளிகளை பெற்றிருந்தது. இதுவரை அதிகபட்சமாக 13 புள்ளிகளுக்குள் இருந்த TRP ரேட்டிங், இந்த ஒரு சில எபிசோட்களில் டாப் கியரில் எகிறி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here