டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் 2021 – பேட்மிண்டனில் தங்கம் வென்ற இந்திய வீரர்!

0

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

தங்க பதக்கம்:

கடந்த சில தினங்களுக்கு முன்  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கிய மாற்றுத்திறனாளர்களுக்கான போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்களின் பங்களிப்பு மிகச் சிறந்த முறையில் இருந்து வருகிறது.  இவர்களின் இந்த  சிறப்பான திறமையால் பதக்க பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றத்தில் இருந்து வருகிறது.  இந்த நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது.

Tokyo Paralympic 2021 - ஈட்டி எரிதலில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்! வெள்ளி, வெண்கலம் என அசத்தல்
அதாவது, இந்தியாவை சார்ந்த அவனி லெகாரா வெவ்வேறு நீளங்களில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு பதக்கங்களை தனதாக்கி இருந்தார்.   இதில் குறிப்பிடும் விதமாக தங்கப்பதக்கம் ஜெயித்து பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனையை பதிவு செய்திருந்தார்.  இந்த நிலையில், பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்க பதக்கம் கிடைத்துள்ளது.


இந்தியாவை சேர்ந்த வீரரான பிரமோத் பகத் பேட்மிண்டன் போட்டியில் பிரிட்டன் வீரரை 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளார். இதனால், இந்திய தங்கப் பதக்கத்தின் பட்டியலில் மேலும் ஒரு பதக்கம் அதிகரித்துள்ளது.  மொத்தமாக, இதுவரை இந்தியாவுக்கு 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என 17 பதக்கங்கங்களுடன்,  பதக்க பட்டியலில் 25 இடத்திற்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here