புதுமாப்பிள்ளை பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அமலா பால் – திருமண அப்டேட்டை கேட்டு நச்சரிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால் தற்போது தனது தம்பி மற்றும் அவரது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமலா பால்

2009ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நீலதம்ரா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் அமலா பால். இவர் அதன் பின்னர் தமிழில் வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் திரையில் தோன்றினார்.

எனினும் அவருக்கு தமிழ் நல்ல பேசும் படமாக அமைந்தது மைனா தான். அந்த படத்தில் அவரின் எதார்த்த நடிப்பும் அழகும் அனைவரையும் அவர் பின் வர வைத்தது. மேலும் இவருக்கும் ஏ.எல் விஜய்க்கும் இடையே காதல் மலர இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இவர் செய்த ஒரே தவறு என்னவென்றால் மார்க்கெட் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டது தான். திருமணமான சில வருடங்களிலேயே இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட அது விவாகரத்தில் முடிந்தது.

அதன் பிறகு தான் அமலா பால் முன்பை விட சுதந்திரமாக இருந்தார். ஆடை படத்தில் கூட ஆடையில்லாமல் நடித்திருந்தார். இந்நிலையில் தான் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

இவர் வெளியிடும் ரீல்ஸ், போட்டோஷூட் என அனைத்தையுமே ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது அவரது தம்பிக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் அவரது தம்பி மற்றும் மனைவியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் உங்களுக்கு எப்பொழுது திருமணம் என்று கேட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here