குழந்தைகளுக்கான பயாலஜிக்கல்-இ தடுப்பூசி – சுகாதார உறுப்பினர் வெளியிட்ட புதிய தகவல்!!

0

இந்தியாவில் குழந்தைக்களுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனையின் அடுத்தகட்டமாக ஆந்திராவை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனத்துக்கு டிசிஜிஐ அனுமதி தந்துள்ளது மேலும் இது குழந்தைகள் மற்றும் பதின்வயதினருக்காக கார்பிவேக்ஸ் என்ற தடுப்பூசியை தயாரித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி:

எளிதில் பரவக்கூடிய தொற்றான கொரோனா எனும் பெருந்ததொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பெரும்பாடு பட்டுவந்த நிலையில் அதனை அழிக்கும் பேராயுதமாக தடுப்பூசியானது கண்டுபிடிக்கப்பட்டது. இதை மத்திய அரசானது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டது. மேலும் இந்தியாவில் மூன்றுவகையான தடுப்பூசிகளை கண்டுபிடித்து அனைவருக்கும் செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய தடுப்பூசியானது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்ட நிலையில் தற்போது குழந்தைகளுக்கான தடுப்பூசியானது கண்டுபிடிக்கப்பட்டு வருக்கின்றது. தற்போது பரிசோதனைக்கான இறுதி நிலையை அடைந்துள்ளோம் என்றே கூறலாம். இந்தியாவில் 44 கோடி குழந்தைகள் உள்ளதாகவும், இதில் 12 முதல் 17 வயதுள்ளவர்கள் 12 கோடி எனவும் கூறப்படுகிறது. தடுப்பூசியின் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு திறன் ஆகியவை முதலில் 12 முதல் 17 வயதுள்ளவர்களுக்கு பரிசோதிக்கப்பட்டு பின்னர் குழந்தைகளுக்குப் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனத்துக்கு தடுப்பூசிக்கான அனுமதியை அளித்துள்ளது. இதற்கு முன் ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி என்ற மருந்துக்கும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மருந்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்றாவதாக பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் கார்பிவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதியானது அளிக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் இந்த பயாலஜிக்கல்-இ தடுப்பூசியை அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here