வங்கி பயனர்களே முதல்ல இதைக் கவனிங்க – இது தெரியலைன்னா சிக்கல் உங்களுக்கு தான்!!

0
வங்கி பயனர்களே முதல்ல இதைக் கவனிங்க - இது தெரியலைன்னா சிக்கல் உங்களுக்கு தான்!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகள் வருகிற செப்டம்பர் மாதத்தில், எந்தெந்த தேதிகளில் செயல்படும் என்ற அட்டவணை தற்போது இணையத்தில் வெளியாகி, பலரால் பகிரப்பட்டு வருகிறது.

வங்கி நிர்வாகம்:

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள், தங்கள் பணப்பரிமாற்றம் குறித்த வழிமுறைகளுக்கு பெரும்பாலும் வங்கி சேவையையே  பயன்படுத்துகின்றனர்.  இந்த நிலையில், பணம் போடுவது, பணம் எடுப்பது மற்றும் தொழிற் சார்ந்த விஷயங்களுக்கு மக்கள் பெரும்பாலும் வங்கி சேவையை பயன்படுத்துகின்றனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்தியா முழுவதும் பேங்க் ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக் - பிப். 23, 24 தேதிகளில் வங்கிகள் இயங்காது என அறிவிப்பு!!

தற்போது வங்கிகளுக்கு, மாதத்தின் 2 வது மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், வருகிற செப்டம்பர் மாதம் வங்கிகளில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படும் என்பது குறித்த, அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி செப்டம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 10 இரண்டாம் சனி, செப்டம்பர் 11 ஞாயிறு, செப்டம்பர் 18 ஞாயிறு, செப்டம்பர் 24 நான்காம் சனி, செப்டம்பர் 25 ஞாயிறு விடுமுறை உள்ளிட்ட 6 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here