இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி வழக்கு – சென்னை ஐகோர்ட் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு!

0
இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி வழக்கு - சென்னை ஐகோர்ட் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு!

இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் தற்போது ஒரு முக்கிய தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு:

தற்போது கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவின் முன்னாள் முதலைமைச்சர்களாகிய எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னிர் செல்வம் இடையே உள்கட்சி மோதல் நிலவி வருகிறது. அதை தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை தேர்தல் ஆணையம் பொருட்படுத்தாமல் இருந்த நிலையில் அதிமுக முன்னாள் உறுப்பினர் பி.ஏ.ஜோசப் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அம்மனுவில் பி.ஏ ஜோசப் ஒரு சில குற்றசாட்டுகளை முன்வைத்து, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28 ஆம் தேதி மனு அனுப்பியும், எந்த பதிலும் இல்லை. இதனால், தனது மனுவை மீண்டும் ஒரு முறை விசாரித்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நிதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளனர். அதாவது தேர்தல் ஆணையத்தில் மனு சமர்ப்பிக்கப்பட்ட ஒரே வாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுநல வழக்கு என்ற பெயரில் வெறும் விளம்பர நோக்குத்துடன் வழக்கு போடப்பட்டுள்ளது என நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்துள்ளனர். மேலும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் மனுதாரர் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here