மக்களுக்கு ஷாக் நியூஸ்.. ஹோட்டல்களில் சேவைக்கட்டணம் – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

0
மக்களுக்கு ஷாக் நியூஸ்.. ஹோட்டல்களில் சேவைக்கட்டணம் - உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

இந்தியாவில் இயங்கும் தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சேவை கட்டணத்திற்கு தடை:

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பொருட்களின் விலையால் தங்கும் விடுதிகள், உணவகங்களில் சேவை கட்டணம் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது. பல புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அண்மையில் தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் மத்திய அரசு தடை விதித்தது. இந்த உத்தரவை மீறினால் சட்டரீதியாக தண்டனை அளிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

மேலும் இது குறித்து புகார் அளிக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் புகார் எண்களும் வெளியிடப்பட்டன. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தற்போது விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்நிலையில் அடுத்த நடவடிக்கை இனிவரும் களங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here