வங்கியில் Deposit செய்துள்ளீர்களா.. உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ் – பணம் போடவோ எடுக்கவோ முடியாது!

0
வங்கியில் Deposit செய்துள்ளீர்களா.. உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ் - பணம் போடவோ எடுக்கவோ முடியாது!

புனேவை சேர்ந்த ரூபாய் கூட்டுறவு வங்கியின் (Rupee Cooperative Bank) மீது ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதால் இனிமேல் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் போடவோ, பணம் எடுக்கவோ முடியாத சூழல் உருவாகி உள்ளது.

பணம் எடுக்க முடியாது:

இந்தியாவில் இயங்கும் அரசு சார்ந்த மற்றும் கூட்டுறவு வங்கிகளை நிர்வகிப்பது இந்திய ரிசர்வ் வங்கி. இந்த வங்கிக்கு கீழ் செயல்படும் மற்ற வங்கிகள் ஏதேனும் விதிமுறைகளை மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உண்டு. இந்நிலையில் புனேவை மையமாகக் கொண்ட ரூபாய் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கடந்த 2017ம் ஆண்டு பாம்பே உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த உத்தரவு ஆறு வாரங்களுக்கு பிறகு அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது. ரூபாய் கூட்டுறவு வங்கியானது, வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 11(1) மற்றும் பிரிவு 22(3)(d) மற்றும் பிரிவு 56 ஆகியவற்றின் விதிகளுக்கு இணங்க வில்லை என்று கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு பிறகு பணம் போட்ட டெபாசிட் தாரர்களுக்கு அதிகபட்சமாக 5 லட்சம் தர முடியும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இதனால் இன்று முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகு வங்கியின் வணிகத்தை நிறுத்துவதாகவும், ரூபாய் கூட்டுறவு வங்கியிடம் போதிய வணிகம் இல்லாததால் இவ்வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த நடவடிக்கையால் அவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது டெபாசிட் பணம் கிடைக்காதோ என்று வருத்தத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here