நயன்தாராவின் திருமண உடையுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல காமெடி நடிகை – வைரலாகும் போட்டோ!!

0
நயன்தாராவின் திருமண உடையுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல காமெடி நடிகை - வைரலாகும் போட்டோ!!

முன்னணி நடிகையான, நயன்தாரா தனது திருமணத்தின் போது அணிந்திருந்த மெரூன் நிற உடையை தான் அணிந்து கொண்டு, பிரபல காமெடி நடிகை ஆர்த்தி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

வைரல் போட்டோ:

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில், முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனது திருமண விழாவில், நடிகை நயன்தாரா மெரூன் நிறத்தில் ஒரு உடையணிந்து ரசிகர்களை மிரள செய்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இவரது திருமண வீடியோக்கள், விரைவில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில், வரும் வாரம் கல்யாணம் சுற்று நடத்தப்பட உள்ளது. இந்த சுற்றுக்காக போட்டியாளர்கள் பலரும், பிரம்மாண்டமாக உடை அணிந்து வருகை தந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வரும் காமெடி நடிகை ஆர்த்தி, நயன்தாரா தனது  திருமணத்தில் அணிந்திருந்த அதே உடையணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், ரீல் மற்றும் ரியல் என  கமெண்ட் செய்துள்ளனர். மேலும், என்ன கொடுமடா இது என, பகிரங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here