யப்பா.. இப்படி ஒரு ட்விஸ்டா… ஜெயிக்கும் சமயத்தில் கடைசியாக பாக்கியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
யப்பா.. இப்படி ஒரு ட்விஸ்டா... ஜெயிக்கும் சமயத்தில் கடைசியாக பாக்கியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இல்லத்தரசிகள் மத்தியில் விருப்ப சிரியலாக டெலிகாஸ்ட் செய்யப்படுவது பாக்கியலட்சுமி தொடர். கோபியை பிரிந்த பிறகு எப்படியாவது அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் வைராக்கியம் ஆக இருக்கிறார். இதனால் பெரிய சமையல் ஆர்டர் எடுக்கும் இன்டெர்வியூ ஒன்றிலும் ஜெனி, எழில் உதவியுடன் கலந்து கொள்கிறார். ஆனால் அங்கு Bio data கேக்க, அது என்ன என்று கூட அவருக்கு தெரியவில்லை.

ஆனால் சமைக்கும் டாஸ்க் இன்டெர்வியூ-வில் கொடுக்கப்பட்டவுடன் பாதி பேர் விலகிவிட, பாக்கியா நன்கு சமைக்கிறார். சமைத்த உணவுகள் அனைத்தையும் ராஜசேகர் டெஸ்ட் செய்து ஈஸ்வரி மசாலா கேட்டரிங் சர்வீஸை அழைக்க பாக்கியா உள்ளே செல்கிறார். ராஜசேகரை பார்த்ததும் பாக்கியா ஆச்சரியப்பட, அவரும் நீங்க பாக்கியலட்சுமி தானே என அக்கறையாக நலம் விசாரிக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நீங்கள் சமைத்த உணவு அனைத்தும் சூப்பர், இருப்பினும் எங்களுக்கு விஷப்பரீச்சை வேண்டாம் என பாக்கியாவை நிராகரிப்பது போல பேசுகிறார். பாக்கியா தன் நிலைமையை எடுத்து கூறிய பின் ராஜசேகர் மனம் மாறுகிறார். அதாவது ஒரு மினி பார்ட்டி ஹாலில் 200, 300 பேருக்கு முதலில் சமைச்சு காட்டுங்க என ராஜசேகர் ஒரு வாய்ப்பை தருகிறார். இதை சரியாக செய்தால் ஆர்டரை தருகிறேன் என கூற பாக்கியா மிகவும் சந்தோசப்படுகிறார். இதை எழிலிடம் பாக்கியா கூற, எழிலும் மகிழ்ச்சி அடைகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here