ரூ. 4000 கடனுக்கு ரூ. 16,000 லோன்.. கல்லூரி மாணவர் தற்கொலை – ஆந்திராவில் நேர்ந்த சோகம்!!

0
வேடிக்கை பார்த்தது ஒரு குத்தம்மா - கல்யாண வீட்டில் கிணற்றில் விழுந்து ஒரே சமயத்தில் 13 பெண்கள் பலி!!
ரூ. 4000 கடனுக்கு ரூ. 16,000 லோன்.. கல்லூரி மாணவர் தற்கொலை -  ஆந்திராவில் நேர்ந்த சோகம்!!

லோன் ஆப் மூலம் கடன் பெற்ற கல்லூரி மாணவர், கடனை கட்டிய பிறகும் லோன் ஆப் கும்பல் அவரை மிரட்டியதால், மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

மாணவர் தற்கொலை:

கர்நாடக மாநிலத்தில், தாட்சே பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணா, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது, 20 வயது  மகன் வெங்கட் சிவா கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அவசர தேவைக்காக லோன் ஆப் மூலம் ரூ. 4000 கடன் வாங்கியுள்ளார். இதுவரை, பார்ட் டைம் வேலை பார்த்து ரூ. 16,000 வரை  பணம் செலுத்திய, இவரை அந்த லோன்  கும்பல்  தொடர்ந்து மிரட்டி வந்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரூ. 20,000 பணம் கட்ட, சொல்லி வற்புறுத்தியதால் அதிர்ந்த மாணவர் சிவா பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். பணத்தை எப்படியும் கட்டிவிடலாம் என்று சொன்ன தந்தை, மகனுக்கு ஆறுதல் கூறியுள்ளார். தொடர்ந்து லோன் கும்பல், சிவாவின் செல்போனில் இருந்த அவரது நண்பர் எண்களுக்கு சிவா ஒரு  ஏமாற்று பேர்வழி எனக் குறிப்பிட்டு குறுந்தகவல் அனுப்பினர்.

இதனால், மனம் உடைந்த மாணவன் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே மாநிலத்தில், அண்மையில் ஒரு தம்பதி இந்த லோன் ஆப் வாயிலாக கடன் பெற்று தற்கொலை செய்து கொண்டனர். தொடரும் இந்த தற்கொலைகளை தடுக்க லோன் ஆப்புகளை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here