அயோத்தி ராமர் கோவிலுக்கு அடியில் ” டைம் கேப்சூல்” – அறக்கட்டளை நிர்வாகம் தகவல்..!!

0
ayodhya ramar temple
ayodhya ramar temple

அயோத்தி ராமர் கோவில் பற்றி முழு விவரங்களையும் எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள எதுவாக கோவிலுக்கு அடியில் ” டைம் கேப்சூல்” புதைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அயோத்யா ராமர் கோவில் விவகாரம்:

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சர்ச்சைக்குரிய ராமர் கோவில் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் 2.77 ஏக்கர் மதிப்பில் ஆன இடம் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. கூடுதலாக அயோத்தி ராமர் கோவில் கட்ட 3 மாதத்திற்குள் ஒரு குழுவை நியமிக்க வேண்டும் மத்திய அரசு என்றும் உத்தரவிட்டது, உச்சநீதி மன்றம். உத்தரவின்படி மத்திய அரசும் அதற்கான வேலைகளில் இறங்கியது.

புதிதாக, “ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா” என்ற ஒரு அறக்கட்டளையை அமைத்தது. அவர்கள் தான் ராமர் கோவில் திட்டத்தை செயல்படுத்த இருந்தனர். தற்போது, இந்த கோவிலுக்கான பூமிபூஜை வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடக்கவுள்ளது.

” டைம் கேப்சூல்”:

இதில், அடுத்த கட்ட நடவடிக்கையாக ” டைம் கேப்சூல்” என்று எளிதில் உடையாத, கற்று போகாத ஒரு குடுவைக்குள் தற்கால நிகழ்வுகள், வரலாற்று குறிப்புக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் என்னும் பலவற்றை அந்த குடுவைக்குள் வைத்து, புதைத்து விடுவர். இதன் மூலம், வருங்கால சந்ததியினர் தற்கால நிகழ்வுகளை எளிமையாக தெரிந்து கொள்ளலாம் என்றும், உண்மைகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த ரூ.39-க்கு ‘பேவிபிராவிர்’ மாத்திரை – ஜென்பர்க் நிறுவனம் அறிமுகம்..!

time capsule
time capsule

இது குறித்து அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் கூறியதாவது ” ராமர் கோவில் பற்றிய முழு விவரங்களையும் எதிர்கால சந்ததியினர் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும், நாம் நிகழ்த்திய சட்டப்போராட்டங்களை பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும். இந்த ” டைம் கேப்சூல்” 2000 அடி ஆழத்தில் புதைக்க படும், மேலும், ராமர் சென்று வந்த பல புனித நதிகளில் இருந்து நீர்கொண்டு வரப்படும்” என்று தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here