நாளைய போட்டிக்கு இன்றே பிளேயிங் லெவன் அறிவிப்பு…, அணி நிர்வாகம் வெளியீடு!!  

0
நாளைய போட்டிக்கு இன்றே பிளேயிங் லெவன் அறிவிப்பு..., அணி நிர்வாகம் வெளியீடு!!  
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த இரு அணிகள் எப்போதும் மோதினாலுமே ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகும். அதே போன்ற எதிர்பார்ப்பு தான் இத்தொடருக்கும் எழுந்துள்ளது. இந்த தொடர், நாளை (டிசம்பர் 14) தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி வரை அரங்கேற உள்ளது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கான, ஆஸ்திரேலிய அணியின் ப்ளெயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட அந்த அணியில் கேப்டனான பாட் கம்மின்ஸ், துணை கேப்டனாக  டிராவிஸ் ஹெட் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை கீழ்க்காணலாம்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய விளையாடும் லெவன்:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர் ), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here