ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு நடந்த சோகம்…, பயிற்சியாளர் ஓபன் டாக்!!

0
ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு நடந்த சோகம்..., பயிற்சியாளர் ஓபன் டாக்!!
ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு நடந்த சோகம்..., பயிற்சியாளர் ஓபன் டாக்!!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் நேற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில், இலங்கை அணி ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற முன்னிலையில் இருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணியோ ஏற்கனவே பங்களாதேஷ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததால், அதிகபட்ச ரன் ரேட்டுடன் இலங்கை அணியை வீழ்த்தினால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் நிலை இருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதை போல, 291 ரன்களை சேசிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவரில் 289 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானதால் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இது குறித்து ஆப்கானிஸ்தான் அணி பயிற்சியாளர் ஜொனாதன் டிராட், “போட்டிக்கு முன்பாக எங்களிடம் 37.1 ஓவரில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், 295 அல்லது 297 ரன்களைப் பெறால் சூப்பர் 4க்கான வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

சர்வதேச மூன்று வடிவில் சாதித்த டாப் 3 இந்திய வீரர்கள் இவர்கள் தான்…, குறைந்த போட்டியில் ரன் மழை பொழிந்து அபாரம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here