அட்றா சக்க.,  விஜய்யின் G.O.A.T  திரைப்படத்தில் இவர்தான் வில்லனா?? அப்போ தரமான சம்பவம் உறுதி!!

0
அட்றா சக்க.,  விஜய்யின் G.O.A.T  திரைப்படத்தில் இவர்தான் வில்லனா?? அப்போ தரமான சம்பவம் உறுதி!!

கோலிவுட் திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் விஜய்.  இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து இவர் தனது 68 வது படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படத்திற்கு G.O.A.T  என பெயர் வைக்கப்பட்ட நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருந்தது.

இரு வேடத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இதில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன் யோகி பாபு, பிரேம்ஜி, சினேகா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். இதன் பட்டப்படிப்பு நடந்து வரும் நிலையில் இப்படத்தில் விஜய்க்கு மெயின் வில்லனாக நடிப்பவர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அஞ்சாதே, கோ, நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர்  அஜ்மல் கான் தான் இப்படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here