உங்கள் ஆதாரில் உள்ள மொபைல் நம்பர் தொலைந்து விட்டதா?? கவலையை விடுங்க, வீட்டில் இருந்தபடியே எளிதில் நம்பரை மாற்றலாம்!!

0
ஆதார் கார்டு  என்பது  இப்பொழுது அனைவருக்குமே கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் ஆதாரில் கொடுக்கப்பட்ட  மொபைல் எண் தொலைந்து  போனாலோ அல்லது சேவையில்  இல்லாமல்  இருந்தாலோ  அதனை  எப்படி வீட்டில் இருந்தபடியே  மாற்றுவது  என்பதை இந்த  பதிவில்  காணலாம்.

ஆதார் கார்டு

பேங்க்  அக்கௌன்ட்டில்  இருந்து  வேலைக்கு  சேருவது  வரை  அனைவர்க்கும் பொதுவாக தேவைப்படுவது ஆதார்  கார்டு  தான். இப்பொழுது அரசாங்க வேலைக்கு சேர  வேண்டும்  என்றாலே அதற்கு  ஆதார் கட்டாயம்  தேவை. ஆதார்  எவ்வளவு முக்கியமோ  அந்த  அளவிற்கு  அதில்  கொடுக்கப்பட்டுள்ள தனி  மனிதரின் விவரங்களும்  முக்கியம்.

சிலருக்கும் பிறந்த  தேதி, பெயர், அட்ரஸ்  என அனைத்துமே  மாறுபட்டிருக்கும். இப்பொழுது  உள்ள  காலகட்டத்தில் வீட்டில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு  செல்லும்  நிலை  ஏற்பட்டுள்ளதால் யாருக்கும்  ஒய்வு  எடுக்க கூட நேரமில்லை. இப்பொழுது அவர்களுக்காகவே ஆதாரில் மொபைல்  நம்பரை எளிதில் மாற்றுவது பற்றி இதில்  காணலாம்.

ஆதாரை  வீட்டில்  வைத்து  விட்டு  வந்தாலோ அல்லது தொலைந்து  விட்டாலோ அதில்  கொடுக்கப்பட்ட  மொபைல்  நம்பரை  வைத்து  ஆதார்  Opt  மூலம் மீண்டும் பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம். ஆனால் அந்த  மொபைல்  நம்பரே  தொலைந்து விட்டால் என்ன  செய்ய  முடியும். அந்த  மொபைல்  நம்பரை  எப்படி  மாற்றுவது என்று காணலாம்.

  • முதலில் https://uidai.gov.in/ என்ற வெப்சைட்டுக்குள் செல்லவும்.
  • அதன்  பின்  My Adhaar  என்ற  ஆப்ஷனை  கிளிக்  செய்யவும். அதில் Order Aadhaar PVC Card என்ற ஆப்சன்  வரும்  அதனை  கிளிக்  செய்யவும்.
  • இப்பொழுது  ஆதார் எண்ணை  கேட்கும். உங்கள்  12 இலக்க ஆதார்  எண்ணை  அங்கே  உள்ளிடவும். அதன்  பிறகு  Captcha code ஐ உள்ளிடவும்.
  • மொபைல்  எண்  கேட்டால் My Mobile number is not registered என்ற  விருப்பத்தை தேர்வு செய்ய  வேண்டும். அதன்  பிறகு  உங்கள்  புதிய  மொபைல்  எண்ணை அதில் உள்ளிடவும். இப்பொழுது OTP வரும். அதை  உள்ளிட்டவுடன் ‘terms and condition’ கிளிக்  செய்து விட்டு  Submit கொடுத்தால் ஆதார் Preview காட்டும்.
  • அதனை  சரிபார்த்து  விட்டு  Make Payment என்ற  ஆப்ஷனை  கிளிக்  செய்யவும். ஆன்லைன்  மூலம்  பணத்தை  செலுத்தி  விட்டு பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here