இதுவரை இல்லாத அளவில் உச்சம் பெற்ற ஜெய்பீம்- உலக அரங்கில் முக்கிய இடம்!!

0

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படம் உலக அரங்கில் முக்கிய இடத்தை பிடித்து முக்கிய படங்களின் வரிசையில் இணைந்து சாதனை படைத்துள்ளது.

முக்கிய சாதனை:

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாகி அண்மையில் ரிலீசான படம் ஜெய்பீம்.   பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக நடிகர் சூர்யா வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.  தற்போது இந்த படம் முக்கிய சாதனையில் இணைந்துள்ளது.

ஐஎம்டிபி  என்ற உலக அளவில் பிரபல ரேட்டிங் தளம் சமீபத்தைய அதிக ரேட்டிங் பெற்ற டாப் 250 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது.  இதற்கு முன், இவர் நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படம்  டாப் 1000 படங்களின் பட்டியலில் 3 வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத் தகுந்தது.  தற்போது ஜெய்பீம் படம் படத்திற்கு 9.6 ரேட்டிங் புள்ளிகள் கிடைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here