தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான, சித்தார்த் தனது சக நடிகையை 2 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், அவருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பகீர் தகவல்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சித்தார்த். ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து உதயம் NH4, அரண்மனை 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் பிரபல விளையாட்டு வீராங்கனை சாய்னா நோவால் குறித்து, இவர் தெரிவித்த கருத்துக்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது கருத்துக்களுக்கு விளையாட்டு வீராங்கனையிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான, மகா சமுத்திரம் படத்தில் நடிகை அதிதி ராவுடன் இணைந்து நடித்தார். இந்தப் படத்தில், இருந்து இருவரும் காதலிப்பதாகவும், தற்போது டேட்டிங்கில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சலூன் கடை ஒன்றிலிருந்து வெளியே வந்த அதிதி ராவ், பத்திரிகையாளர் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார்.
ஆனால், அவருக்கு பின்னால் வெளியே வந்த நடிகர் சித்தார்த், தங்களை போட்டோ எடுக்க வேண்டாம் என தடுத்து கூறி காரில் ஏறி அங்கிருந்து சென்று விட்டார். இந்த செய்திகள் இணையத்தில் வெளியாகி பயங்கரமாக பேசப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்