தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் கடந்த சில வருடங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் கார்த்தி யோகி இயக்கத்தில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் நடிகை மேகா ஆகாஷ், லொள்ளுசபா சேசு, எம் எஸ் பாஸ்கர் போன்ற பிரபலங்களும் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது அந்த நிகழ்ச்சியின் ஆங்கர் சந்தானத்திடம், உங்களை சங்கின்னு சொல்றாங்களே என கேட்க, அதற்கு அவர் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது சங்கீதா என்ற பெண்ணை காதலித்தேன். அப்பொழுது அவரை நான் சங்கி சங்கினு தான் அழைத்தேன், அதற்காக அவர் சங்கி ஆகி விடுவாரா என்று கூறி தனது பதிலை முடித்தார். தற்போது இவரின் கருத்து இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
“இவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள்”., ஆளுநருக்கு சபாநாயகர் நறுக் பதில்!!!