“இவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள்”., ஆளுநருக்கு சபாநாயகர் நறுக் பதில்!!!

0

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று (பிப்.12) தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த உரையை, அவரே முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்தார். அதில் “எனது தொடர் கோரிக்கையான தேசிய கீதம் பாடப்படுவது தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.” என குறிப்பிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து உரையை முழுமையாக வாசித்த சபாநாயகர் அப்பாவு முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளார்.

அதாவது “தமிழகத்தில் இவ்வளவு பெரிய புயல், வெள்ளம் ஏற்பட்ட நிலையில், PM Care Fund-ல் பல லட்சம் கோடி வைத்துக்கொண்டு ஒரு பைசா கூட தரவில்லை. இந்திய மக்களின் கேட்க முடியாத அந்த பணத்தில், ரூ.50,000 கோடியை ஆளுநர் வாங்கி தந்தால் நன்றாக இருக்கும். எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஆளுநரை மாண்போடு நடத்துவதுதான் தமிழ்நாடு அரசின் பண்பு. மேலும் தமிழ்நாட்டு மக்கள் சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல.” என சபாநாயகர் கூறினார். இறுதியாக நிகழ்வின் முடிவில் தேசிய கீதமும் பாடப்பட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

8 நாட்களாக தொடரும் மீட்புபணி., சைதை துரைசாமி மகன் உடல் கண்டுபிடிப்பு., வெளியான பரபரப்பு தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here