8 நாட்களாக தொடரும் மீட்புபணி., சைதை துரைசாமி மகன் உடல் கண்டுபிடிப்பு., வெளியான பரபரப்பு தகவல்!!

0
8 நாட்களாக தொடரும் மீட்புபணி., சைதை துரைசாமி மகன் உடல் கண்டுபிடிப்பு., வெளியான பரபரப்பு தகவல்!!
அதிமுக MLA வும் முன்னாள் மேயருமான சைதை  துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த வாரம் இமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வாடகை காரின் மூலம் மலைப்பாங்கான இடத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அப்போது சட்லஜ் நதிக்கரையின் அருகே செல்லும் போது அவரது கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. மேலும் அந்த சம்பவ இடத்திலேயே அந்த காரின் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.  அதோடு அவரது நண்பர் போலீசாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் வெற்றி துறை சாமியின் உடல் கிடைக்காமல் 8 நாட்களுக்கு மேலாக மீட்பு பணியினர் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் சேகரித்த மூளை திசுவின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு DNA பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இப்படியான சூழ்நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அவரது உடல்  நீருக்குள் கிடைத்துள்ளது ‌. இதையடுத்து சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி துரைசாமி மரணமடைந்தது உறுதியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here