தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தனுஷ் பட நடிகர் – மீண்டு வர பிரார்த்திக்கும் ரசிகர்கள்!!

0
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தனுஷ் பட நடிகர் - மீண்டு வர பிரார்த்திக்கும் ரசிகர்கள்!!

நடிகர் விஷாலின் அவன் இவன் உள்ளிட்ட பல படங்களில், நடித்த ஜி.எம்.குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

வைரல் போட்டோ:

நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடித்து, பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் மன்னர் வாரிசாக நடித்து  அசத்தியவர் நடிகர் ஜி.எம்.குமார். இவர் மாயாண்டி குடும்பத்தார், கர்ணன், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இது போக ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

வயது முதிர்வு காரணமாக, கடந்த சில மாதங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த இவர், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அளிக்கப்பட்ட, உயர் சிகிச்சைக்குப் பிறகு தற்போது இவர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. இதையடுத்து, இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும், என அவரது ரசிகர்கள் வேண்டுதல் வைத்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here