ஆதார் கார்டு வைத்திருப்போரின் கவனத்திற்கு – மார்ச் 31க்குள் இதை செய்யுங்க.. மீறினால் ரூ.10,000 அபராதம்!!

0

ஆதார் கார்டுடன், பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31-ஆம் தேதியுடன், முடிவடைய உள்ளதால், விரைந்து இதனை முடிக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் முடியும் காலக்கெடு:

இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தனி ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு, உள்ளிட்டவைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தனிநபருக்கும், இது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டுடன், பான் கார்டை இணைக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால், பான் கார்டு செயலாற்றதாக ஆக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இந்த வழிமுறைகளை செய்யத் தவறும் பட்சத்தில், 1,000 முதல் 10, 000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், பான் கார்டு விவரங்களை தவறாக வழங்கினால் 10, 000 வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான காலக்கெடு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதுவரை பான் கார்டை இணைக்காதவர்கள், கீழ்கண்ட வழிமுறைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • வாடிக்கையாளர்கள் https://www.incometax.gov.in என்கிற இணையதள முகவரிக்கு செல்லவும்
  • அங்கு link aadhar என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன்பின், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, link now என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
  • இதனை அடுத்து, ஆதார் கார்டுடன் பான் கார்டு எளிதில் இணைக்கப்படும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here