தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு.., பள்ளி ஆசிரியர்களே., இனி Problem Solved?

0
தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு.., பள்ளி ஆசிரியர்களே., இனி Problem Solved?
தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு.., பள்ளி ஆசிரியர்களே., இனி Problem Solved?

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை அவ்வப்போது போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 31ம் தேதியும், ஜூன் 1ம் தேதியும் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் வழங்கப்பட்டது. ஆனால் ஒரு நாள் வித்தியாசத்தில் ஜூன் 1ம் தேதி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.3,170 குறைத்து வழங்கப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் “சம வேலைக்கு சம உரிமை” வழங்க வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக நம்பிக்கை தெரிவித்து இருந்தது. இதுவரை அறிவிப்பு வெளிவராததால் இடைநிலை ஆசிரியர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

அடடே குட்டி ஜோதிகாவா இது?? எம்புட்டு அழகு.., அழகிய புகைப்படம் உள்ளே!!

இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த கோரிக்கை தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் ஜூன் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டம் தொடக்க கல்வி இயக்குனர், நிதித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் தலைமையில் நடைபெறுவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். நீண்ட கால கோரிக்கையை அரசு பரிசீலிக்க இருப்பதால் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here