ஆன்லைன் வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச டேப்லெட் – மாநில அரசு ஒப்புதல்!!!

0

இணைய வழி கல்வி பயிலும் மாணவர்களுக்காக ஹரியானா மாநில அரசு 8.6 லட்சம் டேப்லெட்களை இலவசமாக விநியோகிக்க உள்ளதாக ஹரியானா கல்வி அமைச்சர் கன்வர் பால் தெரிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகையே புரட்டிப் போட்டு வரும் கொரோனாவால் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கல்வித்துறையும் பெரும் சவாலை சந்தித்து வருகிறது. கொரோனா தாக்கத்தால் கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டது. ஆன்லைன் வகுப்புகள் எனப்படும் புதிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

 

மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்காத வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி நடத்த அரசு உத்தரவிட்டது. இதனால் பல மாணவர்கள் பெரும் சவாலை சந்தித்தனர். ஆன்ட்ராய்டு செல்போனும், இணைய வசதியும் இல்லாத மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது நிலவி வரும் சூழலில் மாணவர்களுக்கு கற்பிக்க இணைய வழி கல்வியே தீர்வாக உள்ளது.

எனவே மாணவர்கள் எவ்வித தடையுமின்றி கல்வி பெற ஹரியானா அரசு 8.6 லட்சம் டேப்லெட்களை 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக விநியோக உள்ளது. இதை அம்மாநிலத்தின் கல்வி அமைச்சர் கன்வர் பால் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here