தோனி இல்லையாம், விராட் கோஹ்லி தான் டாப் – ட்விட்டர் ட்ரெண்டிங்ஸ் 2020!!

0

2020- ஆம் ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட விளையாட்டு நட்சத்திரங்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் விராட் ஹோலி. மேலும் இந்திய கிரிக்கெட் விளையாட்டுகளில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீடாக எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து பிரதமர் மோடி அவர்களின் ட்விட்டிற்கு ரீட்விட் செய்தது இடம் பிடித்துள்ளது.

ட்விட்டர் ட்ரெண்டிங்ஸ்:

பல சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் மக்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படும் முக்கிய சமூக வலைத்தலமாக ட்விட்டர் உள்ளது. இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் விளையாட்டு பிரிவை சேர்ந்த அதிகம் பேசப்பட்ட நபர்களின் பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் ஹோலி முதல் இடத்தில உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

2020 ஆம் ஆண்டில் அனைத்து பேட்டிங் தரவரிசைகளிலும் முதலிடத்தை பிடிக்காத விராட் ஹோலி, ஆனால் ட்விட்டர் ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். விராட் ஹோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதால், டிசம்பர் 17 ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் விராட் ஹோலி நாடு திரும்ப உள்ளார். அனுஷ்கா ஷர்மாவின் கர்ப்பம் குறித்த செய்தியை பகிர்ந்து கொண்ட விராட் கோலியின் ட்வீட், 2020 ஆம் ஆண்டில் ‘அதிக லைக்குகள் மற்றும் மேற்கோள் காட்டப்பட்ட ட்வீட்’ ஆனது.

சினிமாவில் களமிறங்கும் அருண் விஜயின் மகன்!!

நாட்டில் அதிகம் பேசப்படும் ஆண் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் எம்.எஸ்.தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை விராட் ஹோலி முந்தியுள்ளார், பெண்கள் பட்டியலில் மல்யுத்த வீரர் கீதா போகாட் முதலிடத்தில் உள்ளார். மேலும் ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து தனது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்திய எம்.எஸ்.தோனி, சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தினார். இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்காக “ஐபிஎல் 2020” இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here