இனி ஐபிஎல் போட்டிகளை மொபைலிலேயே கண்டுகளிக்கலாம் – ஜியோவின் அதிரடி சலுகை!!

0

ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக திகழும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வருட ஐபிஎல் சீசன் தொடங்கியிருக்கும் நிலையில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.

ஜியோ

jio
jio

ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் இலவசமாக பார்க்கலாம். ஆனால் ஸ்மார்ட் போனில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இலவசமாக பார்க்க முடியாது. அதாவது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் விஐபி ஆண்டு திட்டமான ரூ.399 மற்றும் பிரீமியர் திட்டமான ரூ.1499 சந்தா கட்டி இருந்தால் மட்டுமே ஐபிஎல் தொடரை காண இயலும். இவ்வாறு டிஸ்னி + ஹாட்ஸ்டார் கூறியிருந்த நிலையில் ஜியோ அதிரடியான பல சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.

ரூ. 598 திட்டம்:

jio
jio

ஜியோ வழங்கியுள்ள இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. தினசரி 2ஜிபி டேடாவும், ஜியோவிலிருந்து ஜியோவிற்கு வரம்பற்ற கால்களும், ஜியோவிலிருந்து மற்ற நெட்ஒர்க்கிற்கு 2000 நிமிடங்களும் இலவசமாக வழங்கியுள்ளது. தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ் யும் வழங்குகிறது. அதோடு ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ஹாட்ஸ்டார் ரூ.399 மதிப்பிலான விஐபி மெம்பர்ஷிப்பையும் வழங்குகிறது.

ரூ. 499 திட்டம்

Reliance_Jio
Reliance_Jio

இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. தினசரி 1.5 ஜிபி டேடாவும் வழங்கியுள்ளது. அதோடு ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ஹாட்ஸ்டார் ரூ.399 மதிப்பிலான விஐபி மெம்பர்ஷிப்பையும் வழங்குகிறது. ஆனால் இதில் காலிங் மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள் இல்லை.

ரூ.777 திட்டம்

Reliance_Jio
Reliance_Jio

ஜியோ வழங்கியுள்ள இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. தினசரி 1.5 ஜிபி டேடாவும், ஜியோவிலிருந்து ஜியோவிற்கு வரம்பற்ற கால்களும், ஜியோவிலிருந்து மற்ற நெட்ஒர்க்கிற்கு 3000 நிமிடங்களும் இலவசமாக வழங்கியுள்ளது. தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ் யும் வழங்குகிறது. அதோடு ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ஹாட்ஸ்டார் ரூ. 399 மதிப்பிலான விஐபி மெம்பர்ஷிபையும் வழங்குகிறது.

ரூ. 499 திட்டம்

Reliance_Jio
Reliance_Jio

இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. தினசரி 3 ஜிபி டேடாவும் ஜியோவிலிருந்து ஜியோவிற்கு வரம்பற்ற கால்களும் ஜியோவிலிருந்து மற்ற நெட்ஒர்க்கிற்கு 1000 நிமிடங்களும் இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ் யும் வழங்குகிறது. அதோடு  ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ஹாட்ஸ்டார் ரூ. 399 மதிப்பிலான விஐபி மெம்பர்ஷிபையும் வழங்குகிறது.

ரூ.2599 திட்டம்

jio-IPL
jio-IPL

இந்த திட்டம் ஒரு வருடத்திற்கான வேலிடிட்டி கொண்டுள்ளது. தினசரி 2 ஜிபி டேடாவும், ஜியோவிலிருந்து ஜியோவிற்கு வரம்பற்ற கால்களும், ஜியோவிலிருந்து மற்ற நெட்ஒர்க்கிற்கு 12,000 நிமிடங்களும் இலவசமாக வழங்கியுள்ளது. அதோடு தினசரி 100 இலவச எஸ்.எம்.எஸ்களும் ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ஹாட்ஸ்டார் ரூ. 399 மதிப்பிலான விஐபி மெம்பர்ஷிபையும் வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here