Wednesday, June 26, 2024

“மின்னல் மனிதர்” உசைன் போல்ட்டுக்கு கொரோனா – ரசிகர்கள் ஷாக்!!

Must Read

பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

“மின்னல் மனிதர்”

கடந்த 2008,2012 மற்றும் 2016 ஆம் நடந்த ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் தொடர்ச்சியாக தங்கம் வென்றவர் தான், உசைன் போல்ட். மக்கள் அனைவராலும் மின்னல் மனிதர் என்று பெயர் பெற்றவர்.

அவர் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் “சிறந்த பிறந்தநாள்” என்று குறிப்பிட்டு இருந்தார் அதில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.

உறுதி செய்யப்பட்ட தொற்று:

கடந்த சனிக்கிழமை இவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார் . அவருக்கு கொரோனாவிற்கான எந்த அறிகுறிகளும் இருக்கவில்லை, என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். நேற்று அவருக்கு பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டன, அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

மாஸ்டர் திரைப்படம் ஓடிடி யில் வெளியிடா..?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இது குறித்து உசைன் போல்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் “பாதுகாப்பாக இருங்கள் என் மக்களே” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தன்னை 14 நாட்களுக்கு சுயதனிமையில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

ரசிகர்கள் அட்வைஸ்:

இந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் அவரை பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அவருக்காக தாங்கள் பிராத்தனை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

usian bolt with his baby daughter olymbia
usian bolt with his baby daughter olymbia

அவர் தனது பிறந்தநாளின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றாமல் இருந்தது தான் இதற்கு காரணம் என்று பலரும் கருதுகின்றனர். அவர் முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது தான் இதற்கு காரணம் என்று பலரும் அவரை குற்றம் சாட்டி உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IND vs ZIM 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!

இந்திய ஆடவர் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -