தமிழகத்தில் அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம் – ஊரடங்கு எதிரொலி!!

0
unemployment tamilnadu
unemployment tamilnadu

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸால் பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனாவால் உலகம் முழுவதும் பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் அனைத்து துறையிலும் வேலையின்மை அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் வேலையின்மை பெரும் அளவில் உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழத்தில் வேலையின்மை அதிகரிப்பு 

தமிழத்தில் வேலையின்மை விகிதம் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வந்த நிலையில், கொரோனா தொற்று ஊரடங்கால் தமிழ்நாட்டில் வேலையின்மை விகிதம் திடீரென சீறிப் பாய்ந்துள்ளது. தேசிய அளவில் நடத்தப்பட்ட வேலையின்மை ஆய்வில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

unemployment tamilnadu
unemployment tamilnadu

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 43.8% ஆக இருந்தது மே மாதம் 33% ஆகவும் ஜூன் மாதம் 13.1% ஆகவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் பதிவாகி இருந்தது. தேசிய சராசரி வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.7% ஆக இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஜூலை மாத விகிதம் 8.1% ஆக பதிவாகி உள்ளது. இந்த விகிதம் தொழில்கள் நிறைந்த மாநிலங்கள் ஆன மராட்டியத்தில் 4.4% ஆகவும் குஜராத்தில் 1.9% ஆகவும் உள்ளது.

பெரும் வீழ்ச்சியை கண்டுள்ள தமிழ்நாடு

தமிழகம் மிகவும் முன்னேறிய நகரமயமான நிறைய முறைசாரா தொழில்துறைகளைக் கொண்ட மாநிலம் ஆகும். இங்கு ஊரகப் பகுதிகளில்கூட வேளாண்மை அல்லாத முறைசாராத் தொழில்கள் உண்டு. அதைப் போலவே சேவைத் துறைகளும் அதிகம். எனவே, கொரோனா முடக்கம் அறிவிக்கப்பட்டவுடன் அதிக அளவில் தொழிலாளர் வெளியேற்றம் நடந்து வேலையின்மை அதிக அளவில் உயர்ந்தது. தமிழகத்தில் கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கு கிராமப்புறங்களில் பொது போக்குவரத்து தொடங்காமல் இருபத்தே காரணம் என கூறப்படுகிறது.

unemployment
unemployment

இந்நிலையில் வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு விமானங்கள் மூலம் அழைத்து வருகிறார்கள். வேலைக்கு வந்தவர்களை தனிமைப்படுத்தப்படுவதால் கட்டுமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கின்றன. ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் எதிர்கொண்ட சில பிரச்னைகளால் அந்த துறையில் பணிபுரிந்தவர்கள் பலர் வேலை இழந்தனர். அதேபோல் ஜவுளித்துறையும் ஊரடங்கிற்கு முன்பே மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறை ஆகும்.

80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஏனெனில், வேலைவாய்ப்புக்கு முன்பாகவே தனியார் துறைகளில் வேலை கிடைப்பது சவாலான ஒன்றாக இருந்தது. இவை அனைத்தும் தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகமாக வழிவகுத்துவிட்டன என்றார்.

ஜம்மு & காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட முதலாம் ஆண்டு – 2 நாட்கள் ஊரடங்கு அமல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here